ஹனிமூன் ஓவர், ஷூட்டிங் கிளம்பிய நடிகை..

கொரோனா லாக்டவுன் தளர்வில் பல நடிகர். நடிகைகள் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்டு கவுதம் கிட்ச்லுவை மணந்தார். வெற்றிவேல், இன்று நேற்று நாளை, ஒரு நாள் கூத்து போன்ற பல படங்களில் நடித்த மியா ஜார்ஜ் கடந்த செப்டம்பர் மாதம் அஸ்வின் பிலிப்போஸ் என்ற தொழில் அதிபரை மணந்தார். மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிரச்சி தெஹலான் ரோஹித் சர்சா என்பவரைக் கடந்த ஆகஸ்ட் மாதம் மணந்தார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் படத்தில் நடித்த நிஹாரிகா தொழில் அதிபர் சைதன்யாவை மணந்தார்.

டோலிவுட் நடிகர் நிதின், ஷாலினி என்பவரையும். நடிகர் ராணா மிஹீகா என்பவரையும், நடிகர் ஆரவ் நடிகை ராஹில் என்பவரையும் மணந்தனர். பரியேறும் பெருமாள் நடிகை ஆனந்தி இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரைக் காதலித்து சமீபத்தில் மணந்தார். இவர்கள் திருமணம் தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடந்தது.திருமணம் ஆன நடிகைகள் வீட்டோடு முடங்கி பாத்திரம் தேய்க்கும் காலம் இப்போது இல்லை. நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர்கிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.

நடிகை காஜல் அகர்வால் கவுதம் கிட்ச்லுவை மணந்தார். ஒரு மாதம் மாலத்தீவு சென்று தேனிலவு கொண்டாடினார்கள். ஆச்சார்யா படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் மாலத்தீவிலிருந்து பறந்து வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் காஜல். அவரைப் போலவே கணவர் சைதன்யாவுடன் கடந்த மாதம் மாலத்தீவு சென்ற நடிகை நிஹாரிகா (இவர் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர்) மாலத்தீவில் கணவருடன் தேனிலவு கொண்டாடியதுடன் புத்தாண்டையும் அங்கேயே கொண்டாடினார். கொண்டாட்டம் முடிந்து இருவரும் ஐதராபாத் திரும்பினர். நிஹாரிகா தற்போது வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதற்கான படப் பிடிப்பில் கலந்துகொண்டார். நிஹாரிகா படங்களில் நடித்திருந்தாலும் வெப் சீரீஸ் மூலமாகவே பிரபல ஆனார். எனவே அவர் வெப் சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இவர் நடிக்கும் வெப் சீரிஸ் தெலுங்கில் உருவாகிறது. வெப் சீரீஸ் ஹீரோ நிகில் மற்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் அனசுயா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds

READ MORE ABOUT :