சுருள்முடி நடிகைகள் மீண்டும் மோதல்..

by Chandru, Jan 11, 2021, 16:29 PM IST

நீ அடங்கவே மாட்டியா என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதுபோல் நடிகை கங்கனாவை நெட்டிஸனகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே நடிகை நடிகை கங்கனா ரனாவத் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து வருகிறார். இப்படி சர்ச்சையாகப் பேசி அவர் பிரபலமாவதை விரும்புவர் என்றுதான் தோன்றுகிறது.சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையின்போது பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைளை குற்றம் சொன்னதில் தொடங்கி, கரண்ஜோஹர் உள்ளிட்ட பலர் பிரபலங்கள் மீது புகார் கூறினார்.

பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் போதை மருந்து இலவசமாக தரப்படுகிறது என்றார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் மகன் மீது மறைமுகமாகக் குற்றம் சுமத்தினார். அதன்பிறகு மும்பையிலிருந்து மனாலி சென்ற கங்கனா மத்திய அரசிடம், தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கமாண்டோ பாதுகாப்பு பெற்ற பிறகு மும்பை வந்தார். இரு மதத்தினருக்கிடையே மோதல், கலவரம் உண்டாக்கும் வகையில் சமூக வலைத் தளத்தில் மெசேஜ் பகிர்வதாக அவர் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 3முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமலிருந்தவர் சமீபத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார்.

இந்நிலையில் பிரபல நடிகை டாப்ஸியை வம்பிழுத்திருக்கிறார். இருவருமே சுருள்முடி கூந்தல் கொண்டவர்கள். ஒரு சில சமயம் இருவரும் ஒருவர் போலவே தோன்றுவார்கள்.கங்கனா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் பகிர்ந்துள்ளார், அதில், டாப்ஸி எனது பாணியை ஃபோட்டோ ஷூட்டில் காப்பி அடித்திருக்கிறார் என்றார். மற்றொரு டிவிட்டில் தன்னைத்தானே அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்கிறார்."ஹா ஹா ஹா என்னைக் காப்பி அடிப்பதற்கும், ஆள்மாறாட்டம் செய்வதற்கும் தனது முழு இருப்பையும் நடிகை (டாப்ஸி) அர்ப் பணித்திருப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, சூப்பர் ஸ்டார் பச்சனுக்குப் பிறகு மிகவும் இந்த சூப்பர் ஸ்டார் கங்கனாவை காப்பி அடிக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

கங்கனாவின் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி பொறாமை கொண்டவர்கள் ஒரு திறமையான மற்றும் தன்னம்பிக்கை உடையவர் எதற்கும் பொறாமைக்குத் தகுதியற்றவர். பொறாமை என்பது நரம்பியல் பாதுகாப்பின்மைக்கான அறிகுறியாகும். - ராபர்ட் ஏ ஹெய்ன்லின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி கங்கானவை ஒரு பிடி பிடித்திருப்பதுடன். இது உண்மையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இப்போது நடக்கிறது என ஹேஷ் டேக் பகிர்ந்திருக்கிறார்.அடுதது கங்கானா டாப்ஸியை என்ன சொல்லித் தாக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு ரசிகர்களிடம் இரு நடிகைகளின் மோதல் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை