இந்தியாவில் சமூகநீதி அளவிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் முன்னோடி மாநிலமாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை முன்னேற்றத் திட்டம் தீட்டி அதனை நடைமுறைப் படுத்துவதிலும் முன்னணியில் திகழ்வது எப்போதுமே தமிழகம் தான். அந்த வகையில், தமிழகத்தில் சமூக நலத் துறை வாயிலாகச் செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாகத் தமிழக அரசால் இலவசமாகத் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இந்த தையல் இயந்திரத்தைப் பெற தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏழைப் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த தையல் இயந்திரம் பெறுவதற்குத் தகுதியானவர்கள். மேலும் மாத வருமானம் ரூ.12,000க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்:
1.வயதுச் சான்றிதழ்
2.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3.வருமானச் சான்றிதழ்
4.ஆதார் அட்டை
5.சாதி சான்றிதழ்
6.இருப்பிடச் சான்றிதழ்
7.தையல் பயிற்சி சான்றிதழ்
8.உடல் ஊனமுற்றோர் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்
இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
https://tamil.thesubeditor.com/media/2021/01/social_welfare_form8.pdf