கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்த நடிகை சமந்தா மாடி தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டினார். திடீரென்று யோகாசனத்தில் ஈடுபாடு காட்டினார். பலவித யோகா பயிற்சிகளை கடுமையான முயற்சி மேற்கொண்டு கற்றார். யோகாசன பயிற்சிகளை ஈஷா மையம் வழியாக பயின்றார். ஈஷா மைய சத்குரு சாமியாரை சமீபத்தில் சமந்தா அவரின் சீடராக மாறி நேரில் சந்தித்தார். சாமியார் ஆசனத்தின் மீது அமர்ந்திருக்க சமந்தா அவர் அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மெசேஜும் பகிர்ந்தார் சமந்தா. அதில்,சீடர் தயாராக இருக்கும்போது குரு சத்குரு தோன்றுகிறார். ஆன்மீக செயல்முறையின் முழு முயற்சியும் நீங்களே வரைந்து கொண்ட எல்லைகளை உடைத்து, நீங்கள் இருக்கும் மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதாகும். உங்கள் சொந்த அறியாமையின் விளைவாக, நீங்கள் உருவாக்கிய வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீக்குவதும், படைப்பாளி உங்களை உருவாக்கிய விதத்தில் வாழ்வதும் இதன் நோக்கம்.
முற்றிலும் ஆனந்தமான மற்றும் எல்லையற்ற பொறுப்பு. அறிவொளி என்பது ஒரு அடைதல் அல்லது சாதனை செய்தல் அல்ல. இது ஒரு வீட்டுக்கு வருதல். உங்கள் புலன்கள் நீங்கள் வெளியில் அனுபவிக்கிறீர்கள் என்ற தோற்றத்தை தருகின்றன. ஆனால் நீங்கள் ஒருபோதும் வெளிப்புறத்தை அனுபவித்ததில்லை. நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உள்ளதாக இருப்பதை நீங்கள் உணரும் போது, அந்த முழுமையான வீடு திரும்புவது அறிவொளி என சமந்தா ஆன்மிக தத்துவ மழை பொழிந்து தள்ளி இருக்கிறார். திரைப்படம் ஒன்றில் வில்லி வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சமந்தா. எல்லா ஹீரோக்களுமே ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார்கள். திடீரென்று மங்காத்தா படத்தில் அஜீத் குமார் நெகடிவ் வேடத்தில் நடித்தார். இதில் அர்ஜூனும் நடித்திருந்தார். அவரும் வில்லத்தனமான கதாபத்திரம் தான் ஏற்றார். அஜீத் ஒரு காட்சியில், எத்தனை நாளைக்குத்தான் நல்லவ மாதிரியே நடிக்கறது என்று வசனம் கூட பேசுவார். ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த வரும் ஹீரோயின்களும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர்.
அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் இந்த பாணியிலான படங்களில் நடிக்கின்றனர். சமந்தா தற்போது மாற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் பேமலி மேன் என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். சந்தாவின் அறிமுக வெப் சீரிஸான இது இரண்டாவது சீசனாக வெளியாக உள்ளது. இதில் தான் வில்லியாக அதாவது நெகடிவ் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். மனோஜ் பாஜ்பாய் பிரதான வேடத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இதில் நயன்தாரா. விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே இப்படம் அறிவிக்கப்பட்டாலும் கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலை ஏற்பட்டதால் ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. முன்னதாக கணவருடன் மாலத்தீவு சென்றிருந்த சமந்தா அங்கிருந்து வந்தவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பங்கேற்று நடித்தார். இதுதவிர மற்றொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.