கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் தனது 6 வது நாளில் உலகளவில் ரூ .150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், கோவிட் -19 ஊரடங்கு காரணமாகப் படத்தை வெளியிட ஒரு வருடத்துக்கும் மேலாகக் காத்திருந்தார். தமிழ்நாட்டில் 550 க்கும் மேற்பட்ட திரைகளிலும், தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் 880க்கும் மேற்பட்ட திரைகளிலும் மாஸ்டர் வெளியானது.
தற்போது சினிமாவர்த்தக ஆய்வாளரின் கூற்றுப்படி, இந்த படம் உலகளவில் ரூ .150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, தொடக்க வார இறுதியில் அதிக வசூல் செய்த படமாக இது திகழ்கிறது. நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்புடன் வெளியிடப்பட்ட இப்படம் பெரிய சாதனை புரிந்து வருகிறது.மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பட வசூல் பற்றி ஒரு போஸ்டர் பகிர்ந்தது. மாஸ்டர் அதன் தொடக்க வார இறுதியில் உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்று அதன் மூலம் தெரியவந்தது.
நிறுவனம் வெளியிட்ட மெசேஜில், மாஸ்டர் ரெய்ட்ஸ் தி வேர்ல்ட்! ஃபயர் ஃபயர் உலகளவில் தொடக்க வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக அதிக வசூல் செய்த படம்! என குறிப்பிட்டிருந்தனர். # MasterGloballyNo1 என்ற ஹேஷ்டேக் அன்றிலிருந்து இணையத்தில் பிரபலமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மாஸ்டர் வெறும் ஐந்து நாட்களில் சுமார் 82 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா எரேமியா, அர்ஜுன் தாஸ் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆஸ்திரேலியாவில் பெரும் தொடக்கத்தைப் பெற்றது, இப்போது வெளி நாடுகளில் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் நிலையில் உள்ளது.
இப்படம் தமிழ்நாட்டில் ஒரு நாள் ரூ .26 கோடியை வசூலித்து 'சர்க்கார்' படத்திற்கு பிறகு இரண்டாவது சிறந்த படமாக வெளிவந்துள்ளது. தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிர மணியம், இந்த வார இறுதிக்குள் 'மாஸ்டர்' பட வசூல் 'பிகில்' வாழ்நாள் வசூலைக் கடக்கும் என்று கூறுகிறார். மேலும் படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட விஜய் மற்றும் குழுவினருக்கு நன்றி. இதற்கிடையில், விஜய் தனது 65வது படத்தை. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார். இந்த படம் பிப்ரவரி 2021 இல் படப் பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது. நெல்சன் திலீப்குமார் இதை இயக்கவுள்ளார்.