பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ECIL ல் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 19

பணிக்குத் தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒரு ஆண்டவடது பணியாற்றிய அனுபவம் வேண்டும்.

ஊதியம்: 23,000/-

வயது: 31.12.2020 தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: பட்டியல் தயாரித்தல் மற்றும் நேர்காணல் மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Advt_02_2021.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>