செல்ஃபி எடுத்தே காலத்தை கழிக்கும் லவ் ஜோடி..

Advertisement

திரையுலகில் காதல் ஜோடிகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று சொல்லும் அளவுக்கு தங்களது போக்கைக் கடைப் பிடிக்கின்றனர். சில ஜோடிகள் கண்டதும் காதல் என்று ஓரிருமுறை சந்திப்பில் கல்யாணத்தில் இணைகின்றனர். சில ஜோடிகள் டேட்டிங் என்று ஊர் சுற்றி நேரத்தைக் கழிக்கின்றனர். ஒரு சில ஜோடிகள் பிரேக் அப், பேட்ச் அப் என்று சுற்றுகிறது. ஒரு ஜோடி சந்தித்த நாள் முதல் 100க் கணக்கான செல்பி எடுத்தே காலத்தை கழித்து வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி நானும் ரவுடிதான் படத்தில் இணைந்தது.

இப்படத்தில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்த நயந்தாரா தன்னுடைய மனதில் அவருக்குக் காதல் ஹீரோவாக இடம் கொடுத்தார். 2015ம் ஆண்டு தொடங்கிய நட்பும் காதலும் இன்றும் காதலாகவே நீடிக்கிறது.கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இருவரும் பலமுறை வெளிநாடுகளுக்கு ஜோடியாகப் பறந்து சென்று காதல் சிறகை விரித்தனர். கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே இணைந்து வாழ்ந்து வந்தனர்.

கொரோனா லாக்டவுனில் போரடித்துபோய் இருந்த விக்னேஷ் சிவன் கொரோனா லாக்டவுன் என்று முடியும் நான் எப்போது நயன்தாராவுடன் வெளிநாடு செல்வது என்று ஏக்கத்துடன் கேட்டிருந்தார். அவரது ஏக்கத்தைப் போக்கும் வகையில் தனி விமானம் ஏற்பாடு செய்து கோவா அழைத்துச் சென்ற நயன்தாரா அங்கு அவரது பிறந்த நாளை தடபுடலாகக் கொண்டாடினார். வீடோ, வெளிநாடோ இருவரும் செல்போனில் செல்ஃபி எடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை. இருவரையும் திருமணம் செய்துகொள்ளும் படி இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி வருடக்கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் அவர்கள் தான் திருமணத்துக்கு இன்னும் வெள்ளைக் கொடி காட்டவில்லை. நயன்தாராவுக்கு இன்னமும் ஹீரோயின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். திருமணம் ஆகிவிட்டால் மவுசு போய் விடும் என்ற ரகசியத்தை நன்கு அறிந்துவைத்திருக்கிறார் நயன் தாரா. விக்னேஷ் சிவனும் ஒன்றுக்குப் பலமுறை திருமணம் பற்றிப் பேசி மவுனமாகி விட்டார்.

ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் நயன் தாரா. இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப் பிடிப்பை விக்னேஷ் சிவன் தொடங்கிவிட்டார். சமீபத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா காரில் ஜோடியாகப் புறப்பட்டனர். காருக்குள் அருகருகே அமர்ந்தபடி இருவரும் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்தனர். அதை ரசிகர்கள் வரவேற்று கமெண்ட் வெளியிட்டனர். பொருத்தமான ஜோடி என்று பலர் கமெண்ட் பகிர்ந்த நிலையில் சிலர் இன்னும் எத்தனை வருடத்துக்குத்தான் இப்படி செல்ஃபி புள்ளைகளாவே இருக்கப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>