குழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..

Advertisement

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா மனமொத்த தம்பதிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இந்த ஜோடி இணைந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது, இருவரும் காதலை ரகசியம் காத்து வந்தனர். 3 வருடக் காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணத்து பிறகும் சினேகா தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். 2015ம் ஆண்டு விஹான் என்ற குழந்தை பெற்ற சினேகா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆதியந்தா என்ற அழகான மகளைப் பெற்றெடுத்தார்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் அதிர்வாக ஒரு காரியமும் செய்யக்கூடாது என்ற விஷயங்களை எல்லாம் சினேகா போன்ற சில நடிகைகள் உடைத்தனர். இந்தி நடிகை கரீனா கபூர் கர்ப்ப காலத்தில் கடுமையான யோகாசன பயிற்சிகள் செய்தார். நடிகை எமி ஜாக்ஸன் சில உடற்பயிற் சிகள் மேற்கொண்டார். சமீரா ரெட்டி நீச்சல் குளத்தில் மூழ்கி மூச்சடிக்கி நீருக்குள்ளேயே நீச்சல் செய்தார். சினேகாவும் அதேபோல் துணிச்சலானவர் என்பதை நிரூபித்தார்.

2வது குழந்தையை வயிற்றில் சுமந்த நிலையில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் ஆக்‌ஷன் வேட்டத்தை ஏற்றார் சினேகா. அடிமுறை என்ற பழம் தமிழர் கலையான சண்டை பயிற்சியைப் பெற்றவர் படத்திலும் ஆக்‌ஷன் காட்சியில் நடித்தார். எந்த பாதகமும் இல்லாமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதியந்தா குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆனதையடுத்து குழந்தையின் முதல் பிறந்தநாளைச் சினேகா நேற்று கொண்டாடினார். அலங்கரிக்கப்பட்ட அறையில் பெரிய கேக் வாங்கி வைத்து குழந்தை கேக் வெட்ட வைத்து மகிழ்ந்தார். இதில் சினேகாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சினேகாவின் சகோதரி சினேகாவை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் நச்சென அழுத்தமாக முத்தம் பகிர்ந்தார்.

அந்த படத்தைச் சினேகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். சினேகா தற்போது வான் என்ற படத்தில் நடிக்கிறார். குழந்தையின் பிறந்த நாள் குறித்து மகிழ்ச்சி பகிர்ந்த சினேகா,என் வீட்டு இளவரசிக்கு இன்று 1வது பிறந்த நாள். என் உலகம் அவள் என்றார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரசன்னாவுக்கு பிறந்த தினம் கொண்டாடிய சினேகா,என் ஆன்மா தோழன், என்னுடைய காதல் நாயகன், எனது வழிகாட்டி தேவதை, என் வாழ்கையை இந்த இரண்டு லட்டு (குழந்தைகள்)மூலம் அழகானதாக்கினார். என் சிறிய லட்டு ஆதியந்தாவை அன்பானவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எங்களுக்கு உங்களின் ஆசி வழங்குங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>