கார்த்தியின் சுல்தான் டீஸர் ரிலீஸ் தேதி தெரியுமா? தமிழுக்கு வரும் ராஷ்மிகா..

Advertisement

நடிகர் கார்த்தி சத்தமில்லாமல் நடித்த வந்த படம் சுல்தான். இப்படத்துக்கு டைட்டில் வைக்காமல் பெரும்பகுதி படத்தை முடித்தார் இயக் குனர் பாக்யராஜ் கண்ணன். இவர் பிரபல இயக்குனர் அட்லியின் உதவியாளராக பணியாற்றியவர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கினார். இதில் அவ்வை சண்முகி பாணியில் பாதிபடம்வரை நர்ஸ் உடை அணிந்து கீர்த்தி சுரேஷுக்கு காதல் வலை வீசுவதுபோல் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருந்தார், கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் பாக்யராஜ் கண்ணனுக்கு வாய்ப்பளித்தது. அந்த படமே தற்போது சுல்தான் என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

டோலிவுட்டில் விஜய் தேவர ண்டாவுடன் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங் ளில் நடித்து பிரபலமான ராஷ்மிகா அந்த படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந் தார். தமிழில் ராஷ்மிகா எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சுல்தான் படத்தின் மூலம் அவர் தமிழுக்கு என்ட்ரி தருகிறார். இது ராஷ் கா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்தி நடித்த படம் வெளியாகி நீண்ட இடைவெளி ஏற்பட்டிருந்த நிலையில் அவரது படத்துக்காகவும் ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அதற்கான நேரம் கூடி வந்திருக்கிறது. சுல்தான் படத்தை ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப் பட்டு வந்தது. சுல்தான் படத் தின் டீஸர் பிப்ரவரி 1ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியா கும் என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை பட தயாரிப்பா ளர் எஸ்.ஆர்.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். சுல்தான் படத்திற்கு விவேக் சிவா மற்றும் மெர்வின் ஸோ லோமன் இசை அமைக்கின் றனர். கார்த்தி, ராஷ்மிகாவுடன் யோகிபாபு, பொன்னம்பலம் போன்றவர்களும் நடித்திருக்கின்றனர்.

முன்னதாக கார்த்தி இப்படத் தில் நடித்துக் கொண்டிருந்த போது சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு சத்யராஜ், ஜோதிகா நடித்த தம்பி என்ற படத்தில் நடித்தார். இப்படத் தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். மேலும் சுல்தான் படத்துக்கு டைட்டில் வைப் பதில் பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன. இறுதி யாக சுல்தான் டைட்டில் முடிவானது, இந்த டைட்டில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த அனிமேஷன் படத்துக்கு வைக்க ஆலோசிக்கப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>