எந்திரன் கதை வழக்கில் ஷங்கருக்கு பிடிவாரண்ட்டா? இயக்குனர் விளக்கம்..

by Chandru, Feb 2, 2021, 12:15 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படம் எந்திரன். ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் எந்திரன் கதை தான் எழுதிய கதையா பார்த்து காப்பி அடித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் 2010-ம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிவில் காப்புரிமை சட்டத்தை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கேட்டு ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.ஆனால் விசாரணை செய்யத் தடை விதிக்க முடியாது என்றதுடன் தொடர்ந்து வழக்கை விசாரிக்கச் சென்னை ஐகோர்ட்டுஉத்தரவிட்டது. 10 வருடமாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், கலாநிதி மாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறியது கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கதை ஒரே மாதிரி இருப்பதாகக் கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளைப் பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே எழும்பூர் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு மீதான வழக்கைக் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆருர் தமிழ்நாடன் தெரிவித்தார். இயக்குனர் ஷங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் யாரும் வழக்கில் ஆஜராகவில்லை.இதனால் எழும்பூர் பெருநகர 2வது மாஜிஸ்திரேட் இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தாக தகவல் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
எழும்பூர் நீதிமன்றம் எனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

எனது வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தை அணுகி இந்த செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்பட வில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.இணையதளத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும் நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உலைச்சலைத் தந்துள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் எனத் தயவு கூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஷங்கர் கூறி உள்ளார்.

You'r reading எந்திரன் கதை வழக்கில் ஷங்கருக்கு பிடிவாரண்ட்டா? இயக்குனர் விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை