ஸ்டண்ட் கலைஞர்களுக்காக ரத்த தானம் செய்த விஜய் சேதுபதி

Apr 18, 2018, 08:21 AM IST

ஸ்டண்ட் யூனியன் துவங்கப்பட்டு இன்றுடன் 50 வருடம் முடிந்து 51ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு, ஸ்டண்ட் யூனியன் சார்பாக சென்னை வடபழனியில் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விழாவில், ஸ்டண்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர் வரவேற்புரை வழங்கி விழாவை துவக்கிவைத்தார். பின்னர், விழாவில் ஸ்டண்ட் யூனியனின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கௌரவிக்கப்பட்டனர். இறுதியில், சூப்பர் சுப்பராயன் நன்றியுரையாற்றினார். மேலும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கலந்து கொண்டு ஸ்டண்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

விழாவின் ஒரு பகுதியாக, ரத்த தானம் செய்யும் நிகழ்த்தியும் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “படப்பிடிப்பின் சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக நீங்கள் எவ்வளவோ ரத்தம் சிந்தி நடிக்கிறீர்கள். கடுமையான ஆபத்தான காட்சிகளில் நடிப்பது எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் என்பது என்னால் உணர முடியும். உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள்’ என்றார்.

ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து மருத்துவ முகாம் ஏற்பாடு செய்திருந்தது. ஸ்டண்ட் யூனியனை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டண்ட் கலைஞர்களுக்காக ரத்த தானம் செய்த விஜய் சேதுபதி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை