எஸ்.ஜே. சூர்யா குறிப்பிடத்தக்க நடிகராக இருக்கிறார். விஜய் ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. இப்படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியானது. பின்னர் எஸ்.ஜே,சூர்யா நியூ, அன்பே ஆருயிரே, புலி, இசை போன்ற படங்கள் இயக்கினார்.இசை படத்தில் சத்யராஜுடன் எஸ்,ஜே,சூர்யா நடித்திருந்தார். பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். தெலுங்கு படங்களிலும் நடித்தார். மாஸ்டர் படத்துக்கும் பிறகு விஜய் நடிக்கும் படத்தை யார் இயக்குவார்கள் என்று உறுதி ஆகாமலிருந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ், மோகன்ராஜா, அட்லி ஆகியோர் பெயர்கள் கூறப்பட்டன. அதில் எஸ்,ஜே.சூர்யா பெயரும் இடம் பெற்றது. இறுதியில் விஜய் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குவதாக முடிவானது.
எஸ்,ஜே,சூர்யா தன்னை விஜய் செல்போனில் அழைத்துப் பேசிய ருசிகர சம்பவம் பற்றிக் கூறினார். அவர் கூறியதாவது:சில வருடங்களுக்கு முன் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு போன் அழைப்பு வந்தது, அது புதிய எண்ணாக இருந்ததால் மறுமுனையில் பேசுவது யார் என்று கேட்டு மெசேஜ் அனுப்பினேன். அதன்பிறகு என் போனில் சார்ஜ் காலி ஆகிவிட்டதால் சார்ஜ் போட்டிருந்தேன். பிறகு ஆன் செய்தபோது மீண்டும் அதே எண்ணிலிருத்து அழைப்பு வந்தது. மறுமுனையில் விஜய் பேசினார். அவரது எண் என்னிடம் இருக்கிறது. அதில் பெயர் சேவ் செய்து வைத்திருக்கிறேன்.
ஆனால் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வரவில்லை. விஜய்சாரிடம் விஷயத்தை விளக்கிவிட்டுப் பேசினேன். அவர் நான் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு பாராட்டினார். ஒரு மனுஷன் எவ்ளோதான் கஷ்டப்படுவான் என்ற வசனத்தைக் கேட்டுச் சிரித்ததாகவும் உங்களுடைய ரசிகன் ஆகிவிட்டேன் என்றும் பாராட்டினார், அது எனக்கு மிகவும் உற்சாகத்தை தந்தது என்றார்.இப்படம் 5 வருடத்துக்கு முன்பே முடிந்துவிட்டது. இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார். ரெஜினா கஸ்ஸண்ட்ரா, நந்திதா சுவேதா நடித்துள்ளனர். ரிலீஸுக்காக காத்திருந்த இப்படம் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி வெளியாகிறது.எஸ்.ஜே, சூர்யா நடிகர் விஜய் நடித்த குஷி, புலி இரண்டு படங்களை இயக்கி உள்ளார். அதேசமயம் மெர்சல் என்ற படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்,ஜே,சூர்யா நடித்துள்ளார்.