நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் ப்ரோஹித் நேற்று சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். கடந்த கல்வியாண்டில் வேல்ஸ் பல்கலையில் பயின்று பட்டம் பெற்ற அணைத்து மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது.
ஆண்டு தோறும் பி.எச்டி படித்துவரும் மாணவர்களுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது வேல்ஸ் பல்கலை. இந்நிலையில் சினிமாவில் தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு, என்று ஆராய்ச்சி செய்து 1949 முதல் 2000ம் ஆண்டு வரை ஆய்வு செய்து நடிகர்,இயக்குனர் பாண்டியராஜன் எழுதிய கட்டுரைக்கு கௌரவ டாக்டர் பட்டம் பி.எச்டி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் நடிகர் இயக்குனர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். விழாவில், வேல்ஸ் பல்கலை.தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி கணேஷ் உடனிருந்தார்.