கர்நாடகாவில் கன மழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவ மழை தொடங்யுள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்துகட்டி வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி அணைகளில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. அணைகளின் நீர்வரத்து நிலவரப்படி, வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து காவிரி நீர் 2 நாட்களில் தமிழகம் வந்தையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை தொடங்க இந்த நீர் போதுமானதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.