விஜய் நடிக்கும் சர்கார் படத்துக்கு நோட்டீஸ்

Jul 6, 2018, 16:32 PM IST

விஜய் நடித்து வரும் சர்கார் படத்துக்கு எதிராக சுகாதார துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்ததால் அதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.

சில அரசியல் கட்சிகளும் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என வலியுறுத்தின. இது விஜய்யின் 62 ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சியை சமூக வலைதளத்தில் இருந்து அகற்றுமாறு விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளருக்கு சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

You'r reading விஜய் நடிக்கும் சர்கார் படத்துக்கு நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை