ஜூலை 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: உ.பி., அரசு அதிரடி

Jul 6, 2018, 17:21 PM IST

வரும் ஜூலை 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதித்து உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதன்பிறகு 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதே நிலை 2017ம் ஆண்டிலும் தொடர்ந்தது. இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் அனுமதிக்கப்படாது. நமது இலக்கை எட்டுவதற்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் ” என்றார்.

You'r reading ஜூலை 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: உ.பி., அரசு அதிரடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை