இயக்குனர் சிவகுமார் மர்ம மரணம்

நடிகர் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிவக்குமார், சென்னையில் உள்ள அவருடைய வீட்டில், உடல் அழுகிய நிலையில் இறந்துகிடந்தார்.

Director Sivakumar

1997ஆம் ஆண்டில், அஜித், கவுண்டமணி, செந்தில், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ரெட்டை ஜடை வயசு திரைப்படத்தின் இயக்கியவர் சிவகுமார். இவர் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆயுத பூஜை படத்தையும் இயக்கியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர், சென்னை சாலிகிராமம் வெங்கடேசா நகரில் தனியாக வசித்து வந்தார்.

நீண்ட நாட்களாக வாய்ப்புகள் இல்லாமல் சிவக்குமார் தவித்து வந்தார். இந்நிலையில், இயக்குனர் சிவக்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து, போலீஸ் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, நாற்காலியில் அமர்ந்தபடி, உடல் அழுகிய நிலையில் சிவகுமார் பிணமாக கிடந்தார். சிவகுமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இயக்குநர் சிவக்குமார் இயற்கையாக இறந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்தால்தான் சொல்ல முடியும் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

READ MORE ABOUT :