சிவா மனசுல புஷ்பா... சென்சார் போர்டுக்கு நோட்டீஸ்

‘சிவா மனசுல புஷ்பா’ என்ற திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திரைப்படத் தணிக்கை வாரியத்துக் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Siva Manasula Pushpa

சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி, ‘சிவா மனசுல புஷ்பா' என்ப படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு, விண்ணப்பம் செய்தார்.

இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்கள், படத்தின் தலைப்பான ‘சிவா மனசுல புஷ்பா’ என்பதை மாற்ற வேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இந்த உத்தரவை எதிர்த்து, வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "தணிக்கை வாரியத்தின் உத்தரவு சட்டவிரோதமாகும்.

கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.இது, சாதி, மத ரீதியான பெயர்களும் இல்லை. எனவே, தணிக்கை வாரியத்தின் ஒரு தலைபட்சமான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டார்.