சச்சினை சீண்டி பார்க்கும் ஸ்ரீரெட்டி!

தெலுங்கில் மார்க்கெட் காலியான நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு பட ஹீரோக்கள், தன்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார்.

Sri Reddy-Sachin

இவருக்கு, டோலிவுட் கடும் கண்டனங்களை தெரிவிக்க, அங்கிருந்து சென்னை வந்த ஸ்ரீரெட்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி என பல பேர் மீது தினமும் பாலியல் குற்றஞ்சாட்டி வந்தார்.

கோலிவுட் சினிமாவும், ஸ்ரீரெட்டிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில், ரெட்டி டைரி என்ற படத்தில், ஸ்ரீரெட்டி, அவரது கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.

இதில், பல முன்னணி நடிகர்களின் முகத்திரையை கிழிப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி சவால் விட்டு வந்தார். ஆனால், ஸ்ரீரெட்டியின் எந்தவொரு மிரட்டலுக்கும் யாரும் செவி சாய்க்காத நிலையில், தனது பக்கம் மீண்டும் மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என எண்ணிய ஸ்ரீரெட்டி, இந்தியாவே பெருமை கொள்ளும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மீது புதிய புகாரை முன் வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹைதராபாத்தில், ஒரு பிரபல நடிகையுடன் ரொமான்சில் ஈடுபட்டதாக ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து, புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.

சச்சின் ரசிகர்களோ, அவரது இந்த பதிவுக்கு கீழ் கமெண்டுகளின் வழியே பெரிய யுத்தத்தையே நிகழ்த்தி வருகின்றனர். ஸ்ரீரெட்டி சொல்லும் அந்த நடிகை சார்மி என கிசுகிசுக்களும் கிளம்பியுள்ளன.

ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்க்கெட் யாரோ?

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

 

Recent Videos

Recent News

Most Read News

more headlines in our related posts

Related # news

Related News

News in Details

Actor Raghava Lawrence gives opportunity to Shri Reddy

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் ஸ்ரீரெ...

Actress Srireddy post about Actor Srikanth in FaceBook

தென் சினிமாவின் முக்கிய பிரபலங்களை குறிவைத்து தாக்கி வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி....

Actress Sri Reddy complained to AR Murugadoss

சினிமா வாய்ப்பு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை ஸ்ரீரெட்டி, கிரீன் பார்க் ஹோட்டல், ச...

Ramya Nambeesan says, Some calling to hav sex to give chance in cinema

Ramya Nambeesan says, Some calling to hav sex to give chance in cinema

Actress Sri Reddy Reacts On Pawan Kalyan Comment

பவன் கல்யாண் அண்ணனா? - செருப்பால் அடித்துக் கொண்ட ஸ்ரீரெட்டி...

Telugu actress Sri Reddy stages semi-nude protest, detained

பாலியல் துன்புறுத்தல் - அரை நிர்வாண போராட்டத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி...