ரியாலிட்டி ஷோ மூலம் ஏழைகளுக்கு உதவ விஷால் திட்டம் !

by Mari S, Sep 25, 2018, 18:41 PM IST

சினிமாவில் பிஸியாக உள்ள நட்சத்திர நடிகர்கள் தற்போது ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குவது அதிகரித்துள்ளது. சிம்பு, சூர்யா, கமல், ஆர்யாவை தொடர்ந்து, நடிகர் விஷால் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார்.

சமீபத்தில், வெளியான அதன் புரொமோ வீடியோ, இது என்ன மாதிரியான ஷோ? என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பியது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியை துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இது வேற மாதிரியான ரியாலிட்டி ஷோ என்றும், இதன் டைட்டில் மற்றும் பல ரகசியங்களும் நேற்று நடந்த சண்டக்கோழி 2 இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட்டது.

விஷாலின் நண்பர்களான ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரிக்கும் இந்த நிகழ்ச்சிமூலம், முதல்முறையாக சின்னத்திரைக்கு வருகிறார் விஷால். 'சன் நாம் ஒருவர்' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி, 26 வாரங்கள் நடக்கவிருக்கிறது.

இந்த 26 வாரங்களில், ஏழ்மையின் விளிம்பில் இருக்கும் 30 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் உதவி செய்யவிருக்கிறார் விஷால். அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவிருக்கிறது.

தனது அரசியல் பயணத்தை தொடர, கமல் பாணியை விஷால் பின்பற்றுவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.

இதிலாவது ரியாலிட்டி இருக்குமா பாஸ்? அல்லது இதுவும் வெறும் ஷோ மட்டும்தானா? என்பது போகப் போகத் தெரியும்!

You'r reading ரியாலிட்டி ஷோ மூலம் ஏழைகளுக்கு உதவ விஷால் திட்டம் ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை