தீபிகா படுகோனை திருமணம் செய்யப்போகும் விஜய்சேதுபதி?

செக்கச்சிவந்த வானம் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், அதன் ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில், தீபிகா படுகோனை திருமணம் செய்யப்போவதாக விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’படம் நாளை (செப்டம்பர் 27) ரிலீஸாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 30 நொடி காட்சியை ஸ்னீக் பீக்காக படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் போலீஸ்காரரான விஜய் சேதுபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். தன் சித்தப்பாவுடன் சென்று குடித்துவிட்டு வந்து வீட்டிலிருக்கும் பாட்டியிடம், தீபிகா படுகோனை தான் கல்யாணம் செய்யப் போவதாக உளறும் காட்சி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறது.

மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா என நடிகர்கள் பட்டாளமே இதில், இணைந்துள்ளனர்.

இதுவரை வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் காட்சிகள் ரத்தம் தெறிக்க தெறிக்க இருந்த நிலையில், படத்தில் ஆடியன்சுக்கு ரிலேக்சேஷன் தரும் நகைச்சுவை போர்ஷனும் உள்ளது என ஸ்னீக் பீக் குடும்பங்களையும் திரையரங்கிற்கு வரவழைக்கும் விதமாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி வில்லனா? ஹீரோவா?

பல சீனியர் நட்சத்திரங்களுடன் போட்டி போடும் வாய்ப்பு இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ளது. படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும், அதிக முக்கியத்துவம் யாருக்கு? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு மூவருமே தவறான தொழில் செய்பவர்களாகவும் டானாக விளங்கும் தங்களது தந்தை பிரகாஷ் ராஜின் இடத்தை பிடிக்கவும் போராடுகின்றனர். ஆனால், போலீஸ்காரரான விஜய்சேதுபதி இவர்கள் மூவருக்கும் வில்லனாக வருகிறாரா? இல்லை இந்த மூன்று பேர் முகத்திரைகளையும் கிழிக்க அவர்களுடன் நட்பு பாராட்ட, வேலை இழந்த போலீஸ்காரராக வருகிறாரா? இல்லை, பணம் மற்றும் பதவி ஆசை பிடித்த காவல் அதிகாரியாக வருகிறாரா? என்பது நாளைய சூரிய உதயத்தின் போது வரும், செக்கச்சிவந்த வானத்தில் தெரிந்து விடும்!

எதுவாக இருந்தாலும், விஜய்சேதுபதி மற்றும் சிம்புவுக்கு அதிகம் மார்க்கெட் மற்றும் ரசிகர்கள் இருப்பதால், அவர்களது கேரக்டர்களுக்கு மணிரத்னம் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

’செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஸ்னீக் பீக் இதோ..-

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds