எம்.எல்.ஏ.கருணாஸை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு போலீஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவாடாணை தொகுதி எம்.எல்.ஏ.கருணாஸ் கடந்த வாரம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காவல் துறை மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.
இவர் பேசிய வீடியோ இணையங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கருணாஸை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, கருணாஸை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு போலீஸ் சார்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வந்தது. அப்போது, கருணாசை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துவது குறித்து அனுமதிக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.