அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இவரது இந்த புதிய படத்தில்தான் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நயன்தாரா தயாரிப்பிலும், நடிப்பிலும் வெளியான ‘அறம்’ படம் மாபெரும் வெற்றியையும் படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு பல விருதுகளையும் வாரித் தந்தன. அறம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நயன்தாரா, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயன் – ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் ஒரு காமெடி படம் ஆகியவற்றில் பிசியாகியுள்ளார்.
இந்நிலையில், தனது அடுத்த படத்தின் வேலையை துவங்கிவிட்டார் கோபி நயினார். வடசென்னையில், (இவரும் வடசென்னையா?) வசித்து வரும் இளைஞர்களையும், அவர்களது கால்பந்தாட்ட திறமைகளையும் மையமாக வைத்து திரைக் கதை எழுதப்பட்டுள்ளதாக இயக்குநர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
இந்த படத்தில், முதன்முறையாக ஜெய்யுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்ந்துள்ளார்.
பெண்களுக்கான கிரிக்கெட்டை கதைக் களமாக உருவாகி வரும் ‘கனா’ படத்தில் கிரிக்கெட்டராக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், மீண்டும் விளையாட்டு தொடர்பான படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.