இந்தியன் 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா?

anirudhs music in Indian2 movie

Dec 11, 2018, 20:20 PM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்சம் வாங்குவோருக்கு எதிராக 70 வயது கிழவன் முன்னாள் சுதந்திர போராட்ட வீரன் கத்தி எடுத்துக் குத்தும் கதையை 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஷங்கர் எடுத்து மாபெரும் வெற்றியை தமிழ் சினிமாவுக்கு பரிசாக அளித்தார்.

தற்போது, அரசியல் களம் கண்டுள்ள கமல், மீண்டும் ஷங்கரை வைத்து இந்தியன் 2வை எடுக்க முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டுள்ளார். படத்தின் வேலைகள் துவங்கி விட்டன. நாயகியாக காஜல் அகர்வாலும் வில்லனாக சிம்புவும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இசையமைப்பாளர் யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து அனிருத் தான் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளதாக பேட்ட இசை வெளியீட்டு விழா குறித்த யூடியூப் பேட்டி ஒன்றில், அனிருத்தே தெரிவித்து விட்டார். இதனால், அனிருத் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

You'r reading இந்தியன் 2 இசையமைப்பாளர் யார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை