கனா விமர்சனம்: சோறும் முக்கியம் ஸ்கோரும் முக்கியம்!

Advertisement

பல கண்கள் காணும் கனாக்கள் நனவாகிறதா இல்லையா? என்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளது இந்த கனா

கிரிக்கெட் ஸ்கோர் முக்கியமா? விவசாயிகளின் பிரச்சனை முக்கியமா என்பதை சோறு முக்கியமா ஸ்கோரு முக்கியமா என கிண்டலாக பன்ச் அடிப்பார்கள். சென்னையில் ஐபிஎல் நடத்தக்கூடாது என போராட்டம் நடத்தி விரட்டி விட்டதை அண்மையில் கண்டோம்.

இந்த கனா படம் சோறு பிரச்சனையையும் ஒரு பெண்ணின் ஸ்கோரு பிரச்சனையும் ஒருங்கே கையாண்ட விதத்திலேயே சிக்ஸர் அடித்து விட்டது.

இளம் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போதே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருப்பது சினிமாவுக்கு அவர் காட்டும் விஸ்வாசம் என்றே சொல்லலாம்.

தன்னுடைய திறமையான நண்பனை பலரும் காமெடியனாக பார்த்தார்கள், சிலர் பாடகராக பார்த்தார்கள். அருண்ராஜா காமராஜை சிவகார்த்திகேயன் இயக்குநராக பார்த்தார்.

அவரை நம்பி தனது முதல் தயாரிப்பு படத்தை இயக்கக் கொடுத்தார். நெருப்பு குமார் ஒரிஜினல் நெருப்பு என்பதை ஃபிரேமுக்கு ஃபிரேம் நிரூபித்துள்ளார்.

கராத்தே கிட், தங்கல், இறுதிச்சுற்று போன்ற வரிசையில் தான் இந்த படமும் உள்ளது. ஆனால், அதிலிருந்து எதை வேறுபடுத்திக் காட்ட முடியும் காட்ட வேண்டும் என்ற சிந்தனையில், அழிந்து வரும் விவசாயத்தை கதையின் கூடவே கூட்டிச் சென்று, இளைஞர்களுக்கு போர் அடிக்காத விதத்தில் உண்மையை உரக்கச் சொல்லி புரிய வைத்திருக்கும் பாடம் தான் கனா.

இதுபோன்ற படங்களை பார்த்தால் தன்னம்பிக்கை பிறக்கவேண்டும், சாதிக்கும் வெறி தூண்டவேண்டும். நிச்சயம் இந்த இரண்டையும் கனா திரைப்படம் ரசிகரின் மனதில் தீப் பற்ற வைக்கிறது. இதுவே இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

விவசாயி முருகேசனின் மகள் கெளசல்யா, தனது தாத்தா இழப்பிற்கு கூட அழாத தனது அப்பா, கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்கு கண்ணீர் விடுவதைக் கண்டு, கிரிக்கெட் மீது சிறு வயதிலே நாட்டம் கொள்கிறார்.

ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடும் ஊரில், ஒரு பெண் எப்படி கிரிக்கெட் விளையாடி, பயிற்சி பெற்று இந்திய மகளிர் அணியில் விளையாடுகிறார் என்பதை அத்தனை வலிகளுடனும், முயற்சிகளுடனும், நேர்த்தியுடனும் இயக்குநர் அருண் ராஜா காமராஜ் செதுக்கியுள்ளார்.

தமிழ்நாட்டு பெண்ணுக்கு இந்திய அளவில் இடம் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், மாதவிடாய் காலத்தில் வீராங்கனைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என பலவற்றை பலமாக பேசியுள்ளது கனா திரைப்படம்.

முழுக்க முழுக்க பாசிட்டிவ் கருத்துகளை சேர்க்கும் படம் என்பதால், இப்படி தான் கதை செல்லும் என்பதை யூகித்து விடலாம். அதை திரைக்கதையில் எத்தனை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அத்தனை சுவாரஸ்யமாக சொல்லி தோனியிடம் கடைசி பந்து கிடைத்தால் சிக்சர் தான் என்பது கணிக்கப்பட்ட விசயமாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டியின் போதும் அதை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் அந்த தருணம் நிகழும் போது உற்சாகமாய் கைதட்டும் அதே மனோபாவத்தை கனா படத்தின் கிளைமேக்ஸ் கொடுக்கிறது.

சக்தே இந்தியாவில் ஷாரூக் கான், இறுதிச்சுற்றில் மாதவன் ஏற்று நடித்தது போன்ற அதே கோச் கதாபாத்திரத்தில் கவுரவ வேடத்தில் வருகிறார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.

ஜெயிச்சுடுவேன் சொன்னா இந்த உலகம் நம்பாது, ஜெயிச்சவன் சொன்னாதான் இந்த உலகம் நம்பும் என சிவகார்த்திகேயன் கெளசல்யாவுக்கு தன்னம்பிக்கை ஊட்டவில்லை இளைய தலைமுறைக்கே தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ், இந்த படத்தில் ஒரு பெரியாரிஸ்ட், நிஜத்திலும் பெரியாரிஸ்ட் என்பதால், நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். நடிப்பை பற்றி கட்டப்பாவுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. ஆனால், விவசாயியாகவும், தந்தையாகவும், பெண்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்ற பெரியார் கருத்தை விதைக்கும் பகுத்தறிவாளனாகவும் ஜொலிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து துரத்தும் இளைஞனாக தர்ஷன் அறிமுக படத்திலேயே நகைச்சுவை காட்சிகளில் கலக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் அவர் தான் ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடுத்தபடியான ஹீரோ என்றே சொல்லலாம்.

திபு நிணன் தாமஸ் இசையில் உருவாகிய வாயடி பெத்த புள்ள பாடல் முதல் சித் ஸ்ரீராம் குரலில் ஒலிக்கும் கனா பாடல் வரை அனைத்து பாடல்களுமே நெஞ்சை அள்ளுகின்றது. இந்த ஆண்டின் சிறந்த ஆல்பங்களில் கனா ஆல்பத்துக்கும் முக்கிய இடம் உண்டு.

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், வயல் கிரவுண்ட் முதல், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் வரை காட்சிக்கு தேவையான ஒளிப்பதிவு, நேர்த்தி என திரையில் பல மேஜிக்குகளை செய்துள்ளார்.

இந்தியா முழுவதிலும் இருந்து பல ரியல் கிரிக்கெட் வீராங்கனைகளை நடிக்க வைத்ததும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நிஜ கிரிக்கெட் வீராங்கனையாக பயிற்சியளித்து மாற்றியதும் என படப்பிடிப்புக்கு முன்னர் பல ப்ரீ புரடக்‌ஷன்ஸ் பணிகளை மேற்கொண்ட படக்குழுவினரின் முயற்சி படத்தில் நன்றாக பிரதிபலிக்கிறது.

நிச்சயம் இந்த கனா ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னொரு காக்கா முட்டை.

கனா ரேட்டிங்: 4/5.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>