சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆக்ரோஷத்தை பார்த்து அம்பயர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக வார்னர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஷர்துல் தாக்கூர் வீசிய 19வது ஓவரில் 3வது பந்தை WIDE யாக்கராக வீச பந்து WIDE லைனுக்கு வெளியே, அதே நேரத்தில் அது ரஷீத் கானின் பேட்டுக்கு கீழே சென்றது போல இருந்தது. அப்போது WIDE சிக்னல் கொடுக்க வந்த அம்பயர் பால் ரீஃபெல், தோனி அம்பயரை ஆக்ரோஷமாக பார்க்க, சில நொடிகளில் தனது முடிவை மாற்றி WIDE இல்லை என்று அறிவித்தார் அம்பயர். இதனை பார்த்த சன்ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் தற்போது இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.
``அன்று அது WIDE டெலிவரி தான். அதை அம்பயர் WIDE என சொல்லியிருந்தால் தோனி விரக்தி அடைந்திருப்பார். தோனியின் ஆக்ரோஷத்தை கண்டு அம்பயர் தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கலாம். இந்த சம்பவம் தோனியால் தான் நடந்தது என்று சொல்லவில்லை. எனினும் தோனி விரக்தி அடைவதை பார்த்து அம்பயர் முடிவை மாற்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது.
கேப்டன்கள் களத்தில் இருக்கும்போது இது போல சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட வாய்ப்பு உண்டு. எனினும் அம்பயர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். அந்த முடிவுக்கு வீரர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.