பாகிஸ்தான் இருப்பதையே மறந்துவிட்டது... ஐ.சி.சியை கடுமையாக சாடிய சோயிப் அக்தர்!

by Sasitharan, Dec 29, 2020, 20:37 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது உலக அணியா, ஐபிஎல் அணியா? என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கான சர்வதேச டெஸ்ட், ஒன்டே மற்றும் டி20 போட்டிகளுக்கான கனவு அணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.

இதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கனவு அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக தேர்வாகி உள்ளார். மேலும் 3 அணிகளிலும் இந்திய அணி கேப்டனர் வீரர் கோஹ்லி இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோரும் ஐசிசி அறிவிப்பில் இடம் பிடித்தனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் கூட, டெஸ்ட், ஒன்டே மற்றும் டி20 ஆகிய 3 அணிகளிலும் இடம்பெறவில்லை.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வெளியிட்ட வீடியோவில், ஐ.சி.சி அறிவித்தது உலக கிரிக்கெட் அணியாக அல்ல, ஐபிஎல் அணியா என்று சாடினார். நீங்கள் அறிவித்த டி20 அணி எங்களுக்கு தேவையில்லை. ஐ.சி.சி.யில் உறுப்பினராக பாகிஸ்தான் இருப்பதை மறந்துவிட்டது. பாகிஸ்தான் அணியில் ஒருவரை கூட அவர்கள் எடுத்து கொள்ளவில்லை. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை ஏன் சேர்க்கவில்லை என்றும் ஐசிசியை விமர்சித்தார். பணத்திற்காக கிரிக்கெட் விளையாட்டை அழித்து வரும் ஐ.சி.சி, ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிவி உரிமைகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறது என்றும் கடுமையாக சோயிப் அக்தர் சாடியுள்ளார்.

You'r reading பாகிஸ்தான் இருப்பதையே மறந்துவிட்டது... ஐ.சி.சியை கடுமையாக சாடிய சோயிப் அக்தர்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை