இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷாந்த் சிங் பேடி அவர்கள் ரகானேவின் கேப்டன்ஷிப் பொறுப்பானது, முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவானான டைகர் பட்டாடி என அழைக்கப்பட்ட மன்சூர் அலி கான் பட்டாடியை நினைவூட்டவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், "காயம்பட்ட வீரர்களை கொண்ட துவண்ட அணியை வைத்து கொண்டு, ரகானே செய்து காட்டிய மாயாஜால விந்தையானது எனக்கு டைகர் பட்டோடியாவை நினைவூட்டுகிறது. பட்டோடியாவின் கேப்டன்ஷிப்பில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அவரின் கேப்டன்ஷிப் மட்டுமே கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் திடகாத்திரமான கால்களை ஊன்ற செய்தது" என்றார். மேலும் கூறுகையில், " பட்டோடியாதான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை எங்களிடையே ஆழமாக புகுத்தியவர். இவர் விறுவிறுப்பான செயல்பாடுகள் மூலம் எங்களை ஒன்றினைத்து பயணிக்கசெய்தார்.
ஒரு விபத்தில் அவரின் வலது கண் பார்வையில் ஏற்பட்ட பாதிப்பு இழப்பால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது. ஆனால் அவரின் மீண்டெழும் உக்தி, அந்த பிரச்சினையில் இருந்து அவரை கம்பீரமாக மீட்டெடுத்து மீண்டும் இந்திய அணிக்கு தலைமை தாங்க வைத்தது. இந்திய நாடு ஜனநாயகத்தை நோக்கி திரும்பிய போது, இராஜ பரம்பரைங்களின் ஆதிக்கமும், அவர்களின் கட்டுக்கதைகளும் குறைய தொடங்கின. ஆனால் இராஜ பரம்பரையை சார்ந்த பட்டோடி எந்த இடத்திலும், அவரின் அதிகாரத்தை உட்புகுத்தவில்லை. இது தான் தலைமை பண்பிற்கான உயிர் மாண்பு " என்றும் கூறியுள்ளார். மேற்கூறிய அனைத்து பண்புகளும் ரகானேவிடமும் உள்ளது. எனவே தான் ரகானே டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்ஷிப் பொறுப்பை தொடரலாம் என்று பேடி கூறியுள்ளார். மேலும், ரகானேவை இந்த தொடர் மற்றும் கேப்டனாக வகித்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் உன்னிப்பாக கவனித்து வந்தேன்.
தன்னிடம் உள்ள பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாண்ட விதம் அவரின் முதிர்ச்சியை காட்டுகிறது. மேலும் மூன்று டெஸ்ட் போட்டிகள் போதும் அணியின் சாதக பாதகங்களை அறிந்து கொள்ள, அதனை ரகானே நேர்த்தியாக கையாண்டுள்ளார். கழுகு பார்வை மூலம் பார்த்தாலும், கேப்டனாக எந்தவொரு சிறு தவறையும் ரகானே செய்யவில்லை. மேலும் அவர் டெஸ்ட் தொடர் முடிந்து பார்டர் கவாஸ்கர் தொடர் கோப்பை அவரிடம் வழங்கப்பட்ட போது, சிறிதும் தாமதிக்காமல் அந்த கோப்பையை முதல் தொடரில் பங்கேற்ற நடராஜனிடம் கோப்பையை வழங்கியது தான், நான் அவருக்கு வாக்களிக்க காரணம் என தெரிவித்துள்ளார். பின்னர் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனாக தொடர வேண்டுமா? அல்லது சாதாரண கேப்டனாக தொடர வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், டெஸ்ட் போட்டிகளில் ரகானே கேப்டனாக தொடரட்டும். குறுகிய ஓவர் கொண்ட போட்டிகளில் கோலி மற்றும் ரோகித் கேப்டன் பொறுப்பை பங்கிட்டு கொள்ளட்டும் என்று தெரிவித்திருந்தார்.