தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் ஐ.எம்.எஸ். விற்பனை விழா

by SAM ASIR, Aug 27, 2018, 19:18 PM IST
இந்திய மிஷனெரி சங்க ஊழிய ஆதரவு விற்பனை விழா வெள்ளாளன்விளை தூய திரித்துவ ஆலயத்தில் நடைபெற்றது. இந்திய மிஷனெரி சங்கம் மூலம் இந்தியாவின் 22 மாநிலங்களில் நற்செய்தி அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1682 நற்செய்தி ஊழியர்கள் இதில் சேவை புரிந்து வருகின்றனர்.  முதல் இந்திய பேராயர் அசரியா வெள்ளாளன்விளையில் பிறந்தவர். இந்திய மிஷனெரி சங்கம் அவரால் ஸ்தாபிக்கப்பட்டது ஆகும்.
 
இந்த சங்கத்தின் சேவைக்கு ஆதரவு அளிக்கும் விற்பனை விழா, தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் வெள்ளாளன்விளை சேகர தூய திரித்துவ ஆலயத்தில் 2018 ஆகஸ்ட் 26 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு சிறப்பு ஆராதனையில் இந்திய மிஷனெரி சங்க பொதுச் செயலாளர் அருட்திரு J. கிங்ஸ்லி ஜாண் ஸ்டீபன் கலந்து கொண்டு தேவ செய்தி வழங்கினார். அதன்பின்னர் காலை 9:30 மணி முதல் விற்பனை விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள், வாலிபர் ஐக்கிய சங்கங்கள் சார்பில் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்விழாவில் இந்திய மிஷனெரி சங்க அபிவிருத்தி ஊழியர்கள், வெள்ளாளன்விளை சேகர குருவானவர் அருட்திரு பி. மோசஸ் ஜெபராஜ், டாக்டர் ஆர். தம்பிராஜ், வெள்ளாளன்விளை சபை தலைவர் எஸ்.கே.டி.ராஜசேகர், பேராசிரியர் டி.சாமுவேல், ஆசிரியர் ஞானதுரை, தேவஆசீர்வாதம், பேராயர் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் செல்வராஜ் உள்பட பல பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You'r reading தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையில் ஐ.எம்.எஸ். விற்பனை விழா Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை