தாம்பரத்தில் ஐஎம்எஸ் பெண்கள் கூடுகை

இந்திய மிஷனெரி சங்கம், தாம்பரம் வட்டார கிளையின் சார்பில் 2018ம் ஆண்டுக்கான பெண்கள் கூடுகை நடைபெற்றது.

Tambaram Women Meeting

டிஜிபி திருமண மண்டபத்தில் செப்டம்பர் 21, வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இக்கூடுகையில் "நற்செய்தி அறிவிப்பதில் பெண்களின் பங்கு" என்ற கருப்பொருளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியை ஷர்மிளா ஸ்டான்லி செய்தி வழங்கினார். சிறுவர், சிறுமியருக்கு தனியாக கூட்டம் நடத்தப்பட்டது. பணித்தளங்களுக்காக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

IMS Women Meeting

இக்கூட்டத்தில் தாம்பரம் மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

READ MORE ABOUT :