ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் கண்டறிந்ததை அடுத்து, உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ராமேஸ்வரம் பாம்பன் பாலம் இடையே போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் கடல் பாலமான ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் 5 மணிக்கு செல்ல கூடிய ரயிலும், 8 மணிக்கு செல்ல கூடிய திருச்சி - ராமேஸ்வரம், மதுரை - ராமேஸ்வரம் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
104 ஆண்டு கால பழமையான பாம்பன் பாலம் விரிசலை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.