நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏலச்சீட்டு நடத்தி அதன் மூலம் பண மோசடி செய்த விவகாரத்தில் நிதி நிறுவன அதிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை தேவானூர் புதுநகர் நேஷனல் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (45). இவரது மனைவி பத்மாவதி. சரவணன், அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன் மூலம், ஏலச்சீட்டு மற்றும் வட்டி இவர், இதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன் மூலம், ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.
ஆனால், நிதி நிறுவனம் மூலம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் பணத்தை முறையாக செலுத்தாமல் வந்துள்ளனர். இதனால், கடன் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
வேறு வழியின்றி, சரவணம் சீட்டு பணத்தை எடுத்து ஈடு செய்து வந்துள்ளார். இதனால், ஏலம் எடுத்தவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கொடுக்க முடியவில்லை. நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் அறிவுறுத்தி சுமார் 6 மாதம் கால அவகாசம் வழங்கியும் சரவணால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால், நேற்று முன்தினம் சரவணன் அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள் பணத்தை திருப்பி தரும்படி வற்புறுத்தினர். இதனால், மனவேதனை அடைந்த சரவணன் அலுவலகத்திற்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் சரவணனின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.