தமிழர்களின் மண் மணக்கும் விளையாட்டு போட்டிகளுடன்.. 14வது ஆண்டு கிராமோத்சவம் திருவிழா

14th Anniversary of Gramatsavam Festival in Erode

by Isaivaani, Dec 8, 2018, 19:51 PM IST

ஈரோடு மாவட்டத்தில், ஈஷாவின் 14வது ஆண்டு கிராமோத்சவ திருவிழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டம் டெக்ஸ்வேலி பகுதியில் உள்ள சித்தோடு அருகே பிரம்மாண்டமாக ஈஷாவின் 14வது ஆண்டு கிராமோத்சவம் திருவிழா இன்று நடைபெறுகிறது. தமிழர்களின் மண் மணம் மாறாத விளையாட்டு போட்டிகளுக்கும், கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய கபடி, சிலம்பாட்டம், வாலிபால், துரோ பால், உறியடிக்கும்போட்டி, மரம் வழுக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, பம்பரம்விடும் போட்டி உள்பட ஏராளமான விளையாட்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளும் இன்று நடைபெறுகின்றன.

இந்த கிராமோத்சவம் திருவிழாவிற்கு தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து 4000 கிராமங்களில் இருந்து சுமார் 40 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
நமது பாரம்பரிய கலை, விளையாட்டுகளை மறவாமல் இருக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும்படி தமிழக மக்களுக்கு ஈஷா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. போட்டிகளில் வெற்றிப்பெரும் போட்டியாளர்களுக்கு பிரபலங்கள் பரிசுகள் வழங்க உள்ளனர்.

You'r reading தமிழர்களின் மண் மணக்கும் விளையாட்டு போட்டிகளுடன்.. 14வது ஆண்டு கிராமோத்சவம் திருவிழா Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை