நாகையில் கடல் சீற்றம்: அதிராம்பட்டினத்தில் கடல் நீர் உள்வாங்கியதால் மக்கள் பீதி

People panic because of the inundation of the sea waters in Adhirampattinam

by Isaivaani, Dec 13, 2018, 21:35 PM IST

அதிரை மற்றும் மல்லிப்பட்டினத்தில் கடல் நீர் திடீரென உள்வாங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், சேது பாவபா சத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய கடலோர மீனவ கிராமங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், கடலோர மாவட்டங்களில் 15ம்தேதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அதிராம்பட்டினம், சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகலில் கடல்நீர் உள்வாங்கியது. சுமார் 150 மீட்டர் வரை கடல்நீர் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு புயல் உருவாகியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

இதேபோல், நாகையில் இன்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

You'r reading நாகையில் கடல் சீற்றம்: அதிராம்பட்டினத்தில் கடல் நீர் உள்வாங்கியதால் மக்கள் பீதி Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை