பாஜகவில் உண்மை பேசுறது நீங்க ஒருத்தர் தான்- கட்கரியை கலாய்த்த ராகுல்!

Rahul Comments Gadgari Speech on Twitter

by Nagaraj, Feb 4, 2019, 19:34 PM IST

பாஜகவில் உண்மைய அப்பப்போ பேசுறது மட்டுமே என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை காங். தலைவர் ராகுல் கலாய்த்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை. பாஜகவில் பிரதமர் கனவில் உள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவ்வப்போது தடாலடியாக பேசி தன் கட்சித் தலைவர்களின் காலை வாரி விடுகிறார். சில நாட்களுக்கு முன் தேர்தலில் வென்றால் மட்டும் தன்னால் தான் என்று கொண்டாடும் தலைவர்கள், தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

நேற்று பாஜக தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்கரி, போதிய வருமானம் இன்றி நிறைய பேர் குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. முதலில் வீட்டைக் காப்பாற்றினால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கூறியிருந்தார். இந்தப் பேச்சும் பாஜவில் சலசலப்பை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலாய்த்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் கட்காரி ஜி, பாஜகவில் நீங்க ஒருத்தர் தான் அப்பப்ப உண்மையை பேசுறீங்க... அப்படியே ரபேல், அனில் அம்பானி, விவசாயிகள் துயரம், முக்கிய அமைப்புகளை சீரழித்தது பற்றியும் பேசுங்க.... என்று கலாய்த்துள்ளார்.

 

You'r reading பாஜகவில் உண்மை பேசுறது நீங்க ஒருத்தர் தான்- கட்கரியை கலாய்த்த ராகுல்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை