மிஷன் சக்தி சோதனையால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து – இந்தியா மீது நாசா கடும் குற்றச்சாட்டு

nasa criticized indias mission shakti

by Suganya P, Apr 22, 0019, 11:40 AM LMT

இந்தியாவின் 'மிஷன் சக்தி' சோதனையால் விண்வெளிக் குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது என்று நாசா குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய செயற்கைக் கோள்களைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர் நாடுகளின் செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையைப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்  டிஆர்டிஓ சென்ற மாதம் 27-ம் தேதி வெற்றிகரமாக நடத்தியது. ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றைத் தகர்த்த இந்தியாவின் முயற்சி வெற்றி அடைந்ததாக, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.

சமூக ஊட்டங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் மக்களிடம் பேசிய பிரதமர், ‘மிஷன் சக்தி’ என்ற திட்டம் வெற்றியடைந்தது. ஏ-சாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றை இந்திய ஏவுகணை துல்லியமாக 3 நிமிடத்தில் தகர்த்து அழித்தது. இதனால்,  அமேரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியா நான்காவது நாடாக இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இந்திய விண்வெளித்துறையின் புதிய சாதனை இதுவாகும்’ என்று பேசிய பிரதமர், ‘இந்த சோதனை பிற நாடுகளை அச்சுறுத்துவதற்கு இல்லை;  இந்திய செயற்கைக் கோள்களைப் பாதுகாப்பதற்காக மட்டும் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தார்.

நாசாவின் குற்றச்சாட்டு...

ஏ-சாட் ஏவுகணை சோதனையின் விளைவாக, இந்திய தகர்த்த அந்த  செயர்க்கிகோளின்  பாகங்கள் 400 துண்டுகளாக விண்வெளியில் சிதறிக் கிடக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐ.எஸ்.எஸ்) ஆபத்து அதிகரித்து உள்ளதாகவும் நாசா கருத்து வெளியிட்டுள்ளது.

நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டைன் கூறுகையில், ‘இந்தியாவின் ஏ-சாட் ஏவுகணை முயற்சி, மிகவும் பயங்கரமானது. இதனால், விண்வெளிக் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மேலே 24 பெரிய பாகங்கள் மிதக்கின்றன. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து 44 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த வாரத்தை விட அதிகம். அதோடு, ஐ.எஸ்.எஸ் –ல் இருக்க கூடிய விண்வெளி வீரர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

உடைந்த 400 பாகங்களில், 60 பாகங்களைக் கண்டுபிடித்துள்ளோம். உடைந்த பாகங்கள் 10 செ.மீட்டர் மற்றும் அதற்கும் மேலான அளவில் உள்ளன. விண்வெளியில், மிதந்து வரும் குப்பைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம். ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒரு முறை தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறிய ஜிம் பிரிடன்ஸ்டைன்,

‘கடந்த 2007-ல் இதே போன்ற சோதனையைச் சீனா மேற்கொண்டது. அதன் பாகங்கள் இன்னும் புவி வட்டப் பாதையில் மிதந்து வருகிறது. தற்போது, இந்தியாவும் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதால், விண்வெளி எதிர்காலத்தில் மனிதர்கள் விண்வெளியில் பயணிப்பதற்கு மிகவும் சவாலாக இருக்கும். அதனால், இது போன்ற சோதனைகளைத் தவிர்க்க வேண்டும்.

இனி வரும் காலங்களில், மற்ற நாடுகளும் இந்த சோதனையில் இறங்கினால் என்ன செய்வது? இத்தகைய சோதனைகளைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.  

You'r reading மிஷன் சக்தி சோதனையால் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆபத்து – இந்தியா மீது நாசா கடும் குற்றச்சாட்டு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை