நடிகை வனிதா விஜயகுமார் கைது..? பிக்பாஸ் வீட்டில் போலீஸ் நுழைந்தது

பிக்பாஸ் 3 எபிசோட் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, ஆள் கடத்தல் வழக்கில் வனிதா விஜயக்குமாரை கைது பெய்ய தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே பிரம்மாண்ட வீடு போன்ற செட் அமைத்து அந்த வீட்டிற்குள்ளேயே பிரபல நடிகர், நடிகைள் தங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.தினமும் கலகலப்பாகவும்,விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸாகவும் செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிப்பதற்கென்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் நடித்து வருவதால் பிக் பாஸ் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக வனிதா விஜயகுமாரை தேடி தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை வனிதா, 2-வது திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஜோவிதா என்ற மகளும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டனர். மகள் ஜோ விதா, தந்தை ஆனந்த்ராஜ் உடன் தெலங்கானாவிலேயே வசித்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆனந்தராஜுடம் தகராறு செய்து மகள் ஜோவிதாவை சென்னைக்கு அழைத்து வந்து விட்டாராம் வனிதா. இதனால் ஆனந்த் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தெலுங்கானா போலீசார் வனிதா மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காகவே தெலுங்கானா போலீசார் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும், இந்த வழக்கில் வனிதா கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு தொற்றியுள்ளது.

வாழ்க்கை அனுபவமே பாடலாக..! பல தலைமுறைகளின் மனதை கொள்ளை கொண்ட கவிஞர் கண்ணதாசன்

Advertisement
More India News
congress-leader-chidambram-has-moved-a-bail-plea-in-delhi-high-court
அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்..
sonia-gandhi-visits-tihar-jail-to-meet-dk-shivakumar
திகார் சிறையில் சிவக்குமாரை சந்தித்து பேசினார் சோனியா..
maharastra-haryana-assembly-elections-counting-tommorow
மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்.. நாளை வாக்கு எண்ணிக்கை.. கணிப்புகளில் முந்திய பாஜக..
centre-to-frame-regulations-for-social-media-traceability-by-january
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஜனவரிக்குள் புதிய விதிமுறைகள்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்.
kalki-bhagwan-released-video-saying-he-had-not-fled-the-country
நான் ஓடிப் போகவில்லை.. கல்கி பகவான் பேச்சு..
pm-modi-meets-with-nobel-laureate-abhijit-banerjee
பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு..
chidambaram-gets-bail-from-supreme-court-in-cbis-inx-media-case-stays-in-ed-custody
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் வழங்கியது
most-honest-man-in-bjp-rahuls-dig-at-evm-remarks
எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரையில்தான் விழும்.. பாஜக எம்.எல்.ஏ. பேச்சு.. ராகுல்காந்தி கிண்டல்..
maharashtra-voting-27-97-percentage-until-1-pm-haryanas-turnout-at-rises-to-3576percentage
மகாராஷ்டிரா, அரியானா தேர்தல்.. மதியம் வரை வாக்குப்பதிவு மந்தம்
maharastra-morshi-varud-assembly-candidate-attacked
மகாராஷ்டிரா தேர்தல்.. பணபட்டுவாடா புகார்.. வேட்பாளர் கார் தீவைப்பு
Tag Clouds