வாக்குச் சீட்டு முறை இனி வரவே வராது.. தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

Cant go back to ballot papers, says EC chief

by எஸ். எம். கணபதி, Sep 19, 2019, 10:31 AM IST

நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவில் இது வரை இல்லாத அளவுக்கு கடந்த நாடாளுமன்றத் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றன. குறிப்பாக, எல்லா மாநிலங்களிலும் லாட்ஜ்கள் உள்பட தனியார் இடங்களில் ஏராளமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இப்படி ஆயிரக்கணக்கான இயந்திரங்களை உபரியாக கொண்டு வந்து ஒவ்வொரு தொகுதியிலும் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, கோளாறு ஏற்படும் இயந்திரங்களுக்கு மாற்றாக பயன்படுத்தவே அவை கொண்டு வரப்பட்டன என்று தேர்தல் அதிகாரிகள் பதிலளித்தனர்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெருமளவு முறைகேடு நடப்பதாக கூறி, காங்கிரஸ் உள்பட 11 முக்கிய எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. ஆனாலும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு சுப்ரீம் கோர்ட்டும் மறுத்து விட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களிடமும், அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மும்பைக்கு வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், இனி இந்தியாவில் வாக்குச்சீட்டு என்பது வரலாற்றில்தான் இருக்கும். வரும் காலத்தில் எந்த தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த மோசடியும் செய்ய முடியாது. இதை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

You'r reading வாக்குச் சீட்டு முறை இனி வரவே வராது.. தலைமை தேர்தல் ஆணையர் திட்டவட்டம் Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை