இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 11 டிசம்பர் 1935 ல் தற்போதைய பிர்பூம் மாவட்டத்தில் , மேற்கு வங்கத்தில் பிறந்தார்.
தனது அரசியல் பயணத்தை உறுப்பினராக தொடங்கி தனது திறமையால் நாட்டின் மிக பெரிய பதவியான முதல் குடிமகனாக உயர்ந்தார்.
1969 ம் ஆண்டு பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்வில் முதல் அரியணையை இந்திரா காந்தியின் ஆதரவில் ராஜ்ஜிய சபா உறுப்பினராக தொடங்கினார்.
பின்னர் இந்திரா காந்தியின் அரசில் 1973 ல் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார் . உள்நாட்டு அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்ட 1975-1977 ல் தீவிரமாக செயல்பட்டார். அப்போது இவர் மீது அதிகார துஷிபிரயோக வழக்கு பதியப்பட்டது.
பின்னர் 1980 ல் ராஜ்ஜிய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் நிதி அமைச்சராக இந்திராவின் அமைச்சரவையில் 1982-1984 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா காந்தியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்தார். இந்திராவின் மறைவிற்குப் (1984) பின் கட்சியில் அவருடைய செல்வாக்கு சரிய தொடங்கியது மேலும் ராஜீவ் காந்தி உடனான வெறுப்புணர்வும் அதிகரித்ததால் இதனை உணர்ந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
பின்னர் 1986 ல் தனி கட்சி தொடங்கினார். RSC ( RASHTRIYA SAMAJWADI CONGRESS) பின்னர் மூன்றாண்டுகள் கழித்து 1989 ல் ராஜீவுடன் சமாதானம் ஏற்பட்டு கட்சியை காங்கிரசுடன் இணைத்துக்கொண்டார்.
பின்னர் ராஜீவ்காந்தியின் ( 1991) மறைவிற்குப் பின் அவரின் அரசியல் வாழ்க்கை மறுபிரவேசம் அடைந்தது பிரதமர் பி.வி நரசிம்ம ராவ் அவர்களால் .
1991 ல் பிரதமர் நரசிம்ம ராவ் அவர்களால் திட்ட குழவின் தலைவராகவும், 1995 ல் வெளியுறவு துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 ல் UPA எனப்படும் ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியி வெற்றியடைந்த போது முதன் முதலாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2004-2012 முதல் மக்களவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2004 முதல் 2006 வரை மன்மோகன் சிங் தலைமையில் வெளியுறவு துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 முதல் 2009 வரை மன்மோகன் சிங் தலைமையில் வெளியுறவு துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009-2012 ல் மன்மோகன் சிங் தலைமையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2012 முதல் 2017 வரை இந்திய தேசத்தின் 13 வது குடியரசு தலைவராகவும் பணியாற்றினார்.
விருதுகள்
* 2008 ல் இந்திய தேசத்தின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் பெற்றார்.
*2019 ல் இந்திய தேசத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றார்.
*1984 ல் Euromoney பத்திரிகை நடத்திய ஆய்வின் மூலம் உலகின் சிறந்த நிதி அமைச்சர் என்ற விருதை பெற்றார்.
*2010 ல் ஆசியாவின் சிறந்த நிதி அமைச்சராக Emerging markets என்ற பத்திரிகையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
என் பல்வேறு பதவிகளை வகித்தவர் .31 ஆகஸ்ட் 2020 ல் இயற்கை எய்தினார். கடைசி வரை பிரதமராக வேண்டும் என்ற அவரின் கனவு நிறைவேறாமல் போனது.