இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. நாளை 5-ம் தேதி முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன.
3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு பின்னர், டி20 போட்டிகள் அகமதாபாத்திலும், ஒருநாள் தொடர்கள் புனேவிலும் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீர்ர்கள் யார்? என்றும் எந்த வீரர் எப்போது களமிறங்குவார் என்ற கேள்வி இந்திய ரசிகர்கள் மத்தியில், எழுந்தது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள். பின்பு 3 ஆவது இடத்துக்கு புஜாராவும், 4 ஆவதாக கேப்டன் விராட் கோலியும் களமிறங்குவார்கள். இதனையடுத்து, 5-வமு ஆட்டகாரராக துணைக் கேப்டன் ரகானே பேட் செய்வார். விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 6-ம் இடத்திலும், 7-வது இடத்தில் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகின்றனர்.
சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் ஹர்திக் பாண்ட்யாவைவிட வாஷிங்டன் சுந்தரையே தேர்வாளர்கள் விரும்புவார்கள். அதன் பின்பு சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிசந்திரன் அஸ்வினும், குல்தீப் யாதவும் அணியில் இருப்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ராவும், இஷாந்த் சர்மாவும் சேர்கக்ப்படுவார்கள். சென்னை ஆடுகளத்தின் தன்மை காரணமாக டெஸ்ட் போட்டியில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என இந்தியா களமிறங்கும் என கூறப்படுகிறது.