மம்தா பானர்ஜி காயம்: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

by SAM ASIR, Mar 14, 2021, 22:33 PM IST

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையின்போது காயம்பட்ட நிகழ்வை விசாரித்த தேர்தல் ஆணையம் அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான ஐபிஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தேர்தல் பரப்புரைக்காக நந்திகிராமம் என்ற இடத்துக்குச் சென்ற மம்தா பானர்ஜியை நான்கைந்து நபர்கள் தள்ளியதில் அவர் கார் மீது மோதி காலில் அடிபட்டது. எலும்பிலும் தசை நாரிலும் காயம்பட்டதால் அவர் சிகிச்சை பெற்றார். மேற்கு வங்க டிஜிபி தேர்தல் ஆணையத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதல் அமைச்சரின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

நிகழ்வு குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை பெற்ற தேர்தல் ஆணையம், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் மம்தாவுக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக பாதுகாப்பு இயக்குநர் விவேக் சகாய் என்ற ஐபிஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீதான குற்றப் பத்திரிகையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் தவறு செய்த மற்ற அதிகாரிகள் யார் என்று மூன்று நாள்களுக்குள் கண்டுபிடிக்குமாறு மேற்கு வங்க தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் நட்சத்திர பேச்சாளர்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும்படி அந்தந்த தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

You'r reading மம்தா பானர்ஜி காயம்: ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை