“கொரோனா 2 ஆம் அலையால் மீண்டும் இந்திய பொருளாதாரம் சரியும்”

by Ari, Apr 19, 2021, 06:05 AM IST

கொரோனா 2 வது அலையால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 ஆம் அலை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா 2 வது அலையும், அதை தொடர்ந்த தடை நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். கொரோனா 2 வது அலையால் சேவைத்துறை போன்ற சில துறைகளில் நேரடி தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் நாட்டின் பொருளாதார சூழலிலும் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என்றும், இது பொருளாதார நடவடிக்கைகளிலும் பரந்த மறைமுக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால், நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர் என இருதரப்பிலும் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள தயாராக வேண்டியது அவசியம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சூழலில் புதிய நிதித்தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதை பொறுத்தவரை, 2-வது அலையின் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஆய்வு செய்து நிதியமைச்சகம்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுமார் 11 சதவீதமாக இருக்கும் என பல்வேறு கணக்கீடுகள் தெளிவுபடுத்தி இருப்பதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

You'r reading “கொரோனா 2 ஆம் அலையால் மீண்டும் இந்திய பொருளாதாரம் சரியும்” Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை