ஒவ்வொரு தேசிய கட்சிக்கும் அறியப்படாத ஆதாயங்கள் மூலம் கிடைத்த நன்கொடை வருவாய்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தேசிய கட்சிகளுக்குக் கிடைத்த நன்கொடை மட்டும் 710.80 கோடி ரூபாய் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சரியாக 532.27 கோடி ரூபாய் பாஜக-வுக்கு மட்டுமே கிடைத்த நன்கொடை ஆகும்.
சரியாக 1,194 பேரிடமிருந்து பாஜக-வுக்கு இந்த நன்கொடை கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களுக்குக் கிடைத்ததாக அறிவித்த நன்கொடையைவிட ஒன்பது மடங்கு அதிகமாக பாஜக-வுக்கு நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை ஜனநாயக சீர்திருத்த மையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை 2016-17 ஆம் ஆண்டுக்கானது. இதே காலகட்டத்தில் 20ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக எந்த நன்கொடையும் தங்களுக்கு வரவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
மொத்தமாக தேசிய கட்சிகளுக்கு 2,123 பேரிடம் இருந்து சரியாக 589.38 கோடி ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இதில், 1,194 பேரிடமிருந்து பாஜக-வுக்கு மட்டும் 532.27 கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதுபோக, காங்கிரஸ் கட்சிக்கு 599 பேரிடமிருந்து சரியாக 41.90 கோடி ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.