ஒடிசாவில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், மருத்துவமனையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. மின்தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். மின்சாரம் தடையால் எந்த வேலையும் ஆகாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக, மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரிதும பாதிக்கப்பட்டுள்ளனர். ராரன் தாலுகா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாவிட்டாலும், சிகிச்சை அளித்து ஆக வேண்டும் என்ற சூழலில் மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், மெழுகுவர்த்தி, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சைகளும், மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, மருத்துவமனையின் மருத்துவர் கூறுகையில்,” தொடர் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணத்தால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் இருக்கிறது. இங்கு தினமும் 180 முதல் 200 நோயாளிகள் வரை வருகின்றனர். நோயாளிகள் வரும்போது மின்பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில், மின்சாரம் இருந்தாலும் இல்லை என்றாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்ப்டடு வருகிறது ” என்றார்.