உ.பி.,யில் பசி, பட்டினி? எலிக்கறி சாப்பிடும் முஷாகர்ஸ் இன மக்கள்

by Isaivaani, Oct 8, 2018, 14:07 PM IST

உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் என்ற மாவட்டத்தில் பசி, பட்டினி காரணமாக எலிக்கறி சாப்பிடும் அவல நிலை அம்மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் குஷிநகர் மாவட்டத்தில் முஷாகர்ஸ் எனப்படும் பழங்குடியின மக்கள் சுமார் 2.6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 97 சதவீதம் பேர் கிராமங்களில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் வறுமை, பசி, பட்டினி காரணமாக கடந்த மாதம் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதில், சோன்வா தேவி என்பவரின் 22 வயது மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மகன்களும் பட்டினியால் இறந்துள்ளனர். இதேபோல், மேலும் மூன்று பேர் பட்டினியால் இறந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த செய்தியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், சகோதரர்கள் இறந்தது உண்மை தான். ஆனால், அவர்கள் பசி, பட்டினியால் இறக்கவில்லை. இருவருக்கும் காச நோய் இருந்துள்ளதே அவர்கள் இறப்பிற்கு காரணம். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாதது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

முஷாகர்ஸ் இன மக்களுக்கு அரசு வேலை, வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த குடும்பத்தினருக்கு ரேசன் கார்டும் விரைவில் வழங்கப்படும் என்றார்.

You'r reading உ.பி.,யில் பசி, பட்டினி? எலிக்கறி சாப்பிடும் முஷாகர்ஸ் இன மக்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை