அணைகளில் உள்ள நீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதால் அந்த நீர் விவசாயத்திற்கு லாயக்கில்லாமல் போய்விடும் என 'அதிமேதாவி'த்தனமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ள கருத்து கேலிக்குள்ளாகியுள்ளது.
ராஜஸ்தானில் 2 முறை முதல்வராக இருந்து தற்போது 3-வது முறையாக பதவி ஏற்றிருக்கிறார் அசோக் கெலாட். முதிர்ந்த அரசியல்வாதியான இவர் சமீபத்தில் நீர் மின்சாரம் குறித்து வெளியிட்ட கருத்து கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
அணைகளைக் கட்டுகிறார்கள். அணை நீரைக் கொண்டு மின்சாரம் எடுத்து விட்டு பின்னர் வயல்வெளிக்கு அனுப்புகின்றனர். அந்த நீரால் என்ன பிரயோஜனம் என்று பேசியுள்ளார்.
நீரின் மூலம் மின்சாரம் என்பது தண்ணீர் வேகமாக வெளியேறுவதைக் கொண்டு மின்சாரம் எடுப்பது தான். ஆனால் அசோக் கெலாட்டோ, தண்ணீருக்குள் மின்சாரம் இருப்பது போலவும், அதனை எடுப்பதால் நீரில் உள்ள சத்துக்கள் காலியாகி தண்ணீர் விவசாயத்திற்கு பயனற்றதாகி விடும் என்பது போல் பேசியுள்ளார்.
என்னே அரிய கண்டுபிடிப்பு! 2 முறை முதல்வராக இருந்தவருக்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லையா? என்று சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்.