சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியுடனான நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வுசெய்தது முதல் கடைசி பந்து வரை ஏகப்பட்ட தவறுகளைச் செய்ததால் தான் தோல்வி அடைய நேர்ந்தது.முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய ஜெய்ஸ்வால் தீபக் சஹர் ஓவரில் அவரிடம் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கைகோர்த்த சுமித் மற்றும் சஞ்சு சாம்சன் சென்னையின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர்.
சாம்சனுக்கு கடந்த ஆண்டு சர்வதேச இருபது ஓவர் போட்டியில் விளையாடு வாய்ப்பு கிடைத்தும் நிரூபிக்கத் தவறிவிட்டார். மேலும் குறைந்தளவிலான வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.இந்நிலையில் இந்த சீசனின் முதல் போட்டியில் தனது அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.தேர்வுக் குழு மற்றும் தோனியின் மீதான தனது முழு கோபத்தையும் நேற்றைய போட்டியில் ரன்களாக மாற்றிச் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சாம்சனின் இந்த இன்னிங்க்ஸ் அவரின் கெரியரில் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 32 பந்தில் , 9 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி என மொத்தம் 74 ரன்களை விளாசி 231.25 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் சென்னையைக் கதிகலங்க வைத்த சாம்சன் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
ஒருபுறம் சாம்சன் சென்னையைப் பந்தாட கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக ஆடினார் . சாம்சனின் விக்கெட்டுக்கு பிறகு வந்த மில்லர் டக் அவுட் ஆக மற்றவர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் மறுபுறம் சாம்சன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தனது அதிரடியை தொடங்கிய ஸ்மித் 4 சிக்சர் , 4 பவுண்டரி என 47 பந்துகளில் 69 ரன்னை விளாசி 19 ஓவரில் சாம் கரண் ஓவரில் அவுட்டாக அணியின் ஸ்கோர் 178/7 ஆக இருந்தது .
190 ரன்கள் வரை போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , பரிதாபமான நிலையிலிருந்த சென்னை அணியைத் தனது பங்கிற்கு 8 பந்தில் 4 சிக்சர்களை விளாசி 27 ரன்களை கடைசி ஓவரில் விளாச ராயஸ் அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 216/7 ஆக உயர்ந்தது.
217 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு நிதானமாக விளையாடினாலும் பெரிய இன்னிங்க்ஸை அவர்களால் இந்த போட்டியிலும் பதிவு செய்ய முடியவில்லை.முந்தைய போட்டியைப் போல இந்த இன்னிங்சிலும் தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டியூ பிளசில் .
டியூ பிளசில் ஒரு புறம் நிதானமாகவும் , அதிரடியாகவும் ராஜஸ்தான் அணி பந்து வீச்சாளர்களுக்கு தன்னால் முடிந்த பதிலடியைக் கொடுத்துக்கொண்டு இருந்தார் . இவர் 37 பந்துகளில் 7 சிக்சர் , 1 பவுண்டரி என 72 ரன்களை விளாசி ஆர்சரின் புயல் வேகப் பந்தில் கீப்பரான சஞ்சுவிடம் சரணடைந்தார் .பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் மற்றும் தோனியின் சுமாரான ஆட்டத்தால் இருபது ஓவர் முடிவில் 200/6 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
சென்னை அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் டியு பிளசில் தனது முத்திரையைப் பதித்தார். பந்து வீச்சைப் பொறுத்தவரை சாம் கரண் சிறப்பாகச் செயல்பட்டனர் . ஆனால் இவர்களின் பங்களிப்பை ராஜஸ்தான் தனது வெற்றியின் மூலம் அபகரித்துக் கொண்டது .
நேற்றைய போட்டியில் மட்டும் ராஜஸ்தான் அணி சார்பாக 17 சிக்சர் மற்றும் சென்னை அணி சார்பாக 16 சிக்சர் என மொத்தம் 33 சிக்சர்கள் மைதானத்தை அலங்கரித்தன.சென்னை அணியின் கேப்டன் தோனியின் திட்டமிடல் சரியாக கைகொடுக்கவில்லை . மேலும் அவர் ஜடேஜா ஓவரில் விக்கெட் விழாத பட்சத்தில் அவர் பகுதிநேர பந்து வீச்சாளரான கேதார் ஜாதவை பயன்படுத்தி இருக்கலாம் . அல்லது ஒரு ஷர்துல் தாக்குரை அணியில் இடம் பெற வைத்திருக்கலாம்.ராயலஸ் ஒரு அணியாகச் சிறப்பாகச் செயல்பட்டு சென்னையைத் துவம்சம் செய்தது .
இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்