ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அபுதாபியில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில்185 ரன்களை விளாசினர். ஆனால் இந்த கடின இலக்கை 17.3 ஓவரில் கடந்து வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் விளையாடிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடிய 63 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர் என 99 ரன்களை விளாசி ஆர்ச்சர் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளரான ஆர்ச்சர் 2013 ம் ஆண்டு நடந்த சீசனில் நான் பந்து வீசினால் அவரால் 100 ரன் அடிக்க முடியாது( "I know if I was bowling I know he wasn't getting da 100," )என ட்விட் செய்திருந்தார். இது இப்போது நிஜமாகி உள்ளதால் இந்த ட்விட் நெட்டிசன்களால் இணையத்தில் வைரலாக்கப்படுகிறது.
மேலும் இவர் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் ஓவரை கணித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்ச்சரை நெட்டிசன்கள் "கிரிக்கெட்டின் நாஸ்ட்ரடோமஸ்" என புகழ்கின்றனர்.