வீட்டிலேயே செய்யலாம் பானிப் பூரி ரெசிபி

Pani Poori recipe

by Isaivaani, Mar 30, 2019, 21:25 PM IST

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய, பானிப் பூரியின் உப்பாலான பூரி வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ரவை - அரை கப்

மைதா - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, உப்பு, பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இதன் மீது, ஒரு ஈரத்துணிப் போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

மீண்டும் மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இந்த மாவை இரண்டு துண்டுகளாக எடுத்து, ஒரு உருண்டையை பெரியளவில் உருட்டி விரித்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு சின்ன வட்டமான கப் எடுத்து மாவு மீது அழுத்தி சின்ன சின்னப் பூரிமாவாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன சின்னப்பூரிகளை போடவும். பூரி நன்றாக உப்பி, பொன்னிறமாக மாறியதும் எடுத்து ஆற வைக்கவும்.

அவ்ளோதாங்க.. பூரி தயார். இத்துடன், உருளைக்கிழங்கு மசாலா மற்றும், புதினா பானி சேர்த்து சாப்பிட்டால் சுவையான பானி பூரி ரெசிபி ரெடி..!

You'r reading வீட்டிலேயே செய்யலாம் பானிப் பூரி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை