ரெட்மி 7 ஸ்மார்ட்போன்: ஏப்ரல் 29 முதல் விற்பனைக்கு வருகிறது

Xiaomi Redmi 7: Key specs, special features, India price and all you should know

by SAM ASIR, Apr 24, 2019, 19:42 PM IST

ஸோமி நிறுவனம் ரெட்மி 6 போனை தொடர்ந்து ரெட்மி 7 ஸ்மார்ட்போனை புதுடெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி நண்பகல் 12 மணி முதல் mi.com இணையதளம் மற்றும் மி ஹோம், அமேசான் இந்தியா, மி ஸ்டுடியோ கடைகளில் ரெட்மி 7 போன் கிடைக்கும்.

2 ஜி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட ரெட்மி 7 போன் ரூ.7,999/- விலையிலும் 3 ஜிபி RAM இயக்கவேகம் மற்றும் 32 ஜிபி சேமிப்பளவு கொண்ட போன் ரூ.8,999/- விலையிலும் கிடைக்கும்.

ரெட்மி 7 போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.26 அங்குல டாட் நாச்; 19.9 விகிதாச்சாரம் மற்றும் 1520X720 பிக்ஸல் தரம்; கொரில்லா கிளாஸ் 5 கொண்டது

இயக்கவேகம்: 2 ஜிபி மற்றும் 3 ஜிபி RAM இயக்கவேகங்கள்

சேமிப்பளவு: 32 ஜிபி. மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி அதிகப்படுத்தும் வசதி

பின்பக்க காமிரா: 12 எம்பி மற்றும் 2 எம்பி ஆற்றல் கொண்ட இரண்டு காமிராக்கள்

முன்பக்க காமிரா: 8 எம்பி ஆற்றல் கொண்ட தற்படத்திற்கான (செல்ஃபி) காமிரா

பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 632

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான MIUI 10

மின்கலம்: 4000 mAh ஆற்றல் கொண்ட பேட்டரி

ஏப்ரல் 22 அன்று அறிமுகமாகிறது ஸ்பீட்ஸ்டர் ரியல்மீ 3 ப்ரோ

You'r reading ரெட்மி 7 ஸ்மார்ட்போன்: ஏப்ரல் 29 முதல் விற்பனைக்கு வருகிறது Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை